கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து

By செய்திப்பிரிவு

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவில் - கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22667) வரும் மார்ச் 1, 2, 3-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, கோவை - நாகர்கோவில் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22668) வரும் 28-ம் தேதி, மார்ச் 1, 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 நாட்கள் ரத்து: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், “கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும், மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசி - மங்களூரு சென்னை இடையிலான விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22851) வரும் 23-ம் தேதி, மார்ச் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மங்களுரு சென்ட்ரல்-சந்திரகாசி இடையிலான விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22852) வரும் 25-ம் தேதி, மார்ச் 4-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அசாம் மாநிலம் திப்ருகார்க் - கன்னியாகுமரி இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 15906), வரும் 25, 28-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி - திப்ருகார்க் இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 15905) வரும் மார்ச் 2, 5-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்