தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம்; சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம்தான்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By செய்திப்பிரிவு

கடலுார்: தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரமாக திகழ்கிறது. சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம் தான். ஆன்மிகத்தில் வேரூன்றிய நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரத்தில் கடந்த 4 நாட்களாக நாட்டியாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றதன் நிறைவு நாள் நிகழ்வு நேற்றிரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டிய நிகழ்வுகளை ரசித்துப் பார்த்தார்.

நாட்டியக் கலைஞர்களை பாராட்டி பதங்கங்களை வழங்கினார் இந்நிகழ்வில் ஆளுநர் பேசியதாவது: நாட்டியத்தின் உன்னத மன்னருக்கு (நடராஜருக்கு) ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வரும் குழுவினருக்கு நன்றி. நடராஜரின் ஆசி பெற்ற இவ்விடத்திற்கு வந்ததால், நானும் ஆசி பெற்றதாக கருதுகிறேன். நடராஜர் ‘ஆதி கடவுள்’ என்பது நம் அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தை பொறுத்த வரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அந்த பஞ்ச பூதங்களில் நான்கு தமிழகத்தில் உள்ளது.

தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம்தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களை பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதைச் சொல்ல தயங்குகின்றோம்.

நாத்திகர்களை தள்ளி வைக்காதீர் நமது நடனமும் இசையும் இயற்கையோடு, ஆன்மிகத்தோடு ஒன்றியுள்ளது. அதனை தவறவிடக் கூடாது. நமது கலாச்சாரத்தில் நாத்திகர்களும் உள்ளனர். அவர்களை தள்ளி வைக்க முடியாது. அவர்களும் ஒன்றிணைந்ததுதான் பாரதம்.

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா உள்ளது. நாம் இன்று உலகின், தலைமை பண்பில் இருகிறோம். உலக அளவில் பெருந்தொற்றை கடந்தோம். பெரிய நாடுகள் சட்டத்தையும், மனிதநேயத்தை மதிக்காமல் விட்டுவிட்டது. ஆனால் இந்தியா இவற்றையே தனது குறிக்கோளாக வைத்துள்ளது.

நிறைவு விழாவில் இடம்பெற்ற நாட்டிய நிகழ்ச்சி.

இதைதான் உலக நாடுகளும் இந்தியாவிடம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. உலக அளவில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது, இவை அனைத்தையும் நம் பிரதமர் தான் செய்து கொண்டிருக்கிறார். இது இந்தியாவுக்கான நேரம்.

பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியா, இன்னும் 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பொருளாதார வல்லரசு நாடாக திகழும். அடுத்த 25 ஆண்டுகளில் 2047 ஆண்டில் இந்தியா முழுவதும் வளர்ச்சியடைந்த முன்னோடி நாடாக திகழும். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளை கற்க வேண்டும். ஆனால் தாய்மொழியை விட வேறு எதுவுமில்லை. நமது அறிவியல் அடையாளம் என்பது நமது டி.என்.ஏ.வில் உள்ளது, நம் பாரம்பரியத்தைப் பற்றி, நாம் பெருமைப்பட வேண்டும்.

ஆன்மிகத்தில் வேரூன்றிய நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வோம். இவ்வாறு ஆளுநர் பேசினார். இந்நிகழ்வில் நாட்டியாஞ்சலி நிர்வாகிகள் டாக்டர் முத்துக்குமரன், வழக்கறிஞர் சம்மந்தம், டாக்டர் கணபதி, டாக்டர் அருள்மொழி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆளுநருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் நாட்டியாஞ்சலி நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்