அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது.

ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள்ரஞ்சித்குமார், குருகிருஷ்ணகுமார் ஆகியோரும், இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரமும் ஆஜராகி வாதிட்டனர். அதேபோல அதிமுக அவைத்தலைவர் மற்றும் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்யநாதன், முகுல் ரோஹ்தகி ஆகியோரும் ஆஜராகி வாதிட்டிருந்தனர்.

ஓபிஎஸ் தரப்பில் ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுகபொதுக்குழு சட்ட ரீதியாக செல்லாது என வாதிடப்பட்டது. அதேபோல இபிஎஸ் தரப்பில், ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே வழிமுறைதான் இடைக்கால பொதுச்செயலா ளரை தேர்வு செய்தபோதும் பின்பற்றப்பட்டுள்ளது.

இரட்டைத் தலைமையால் கட் சிக்குள் ஒருமித்த முடிவை எடுக்க முடியவில்லை. அது கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என முடி
வெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்பதவிகளை உருவாக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளது என்றால் அதை ரத்து செய்துவிட்டு இடைக்கால பொதுச் செயலாளரை உருவாக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உள்ளது. அதன் அடிப்படையிலேயே அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சட்டப்படி செல்லும், என தீர்ப்பளித்தது. ஓபிஎஸ்-க்கு தற்போது கட்சிக்குள் பெரும்பான் மையோ, செல்வாக்கோ இல்லை என வாதிடப்பட்டது.

இன்று காலை தீர்ப்பு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு சரியா, தவறா என இன்று (பிப்.23) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE