ரூ.863 கோடி நிதி திரட்டியது ஃபிரெஷ்டுஹோம்

By செய்திப்பிரிவு

சென்னை: எந்த விதமான ரசாயன கலப்பும் இல்லாமல் சுத்தமான மீன், இறைச்சி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் ஃபிரெஷ்டுஹோம் (FreshToHome) நிறுவனம் அமேசான் சம்பவ் வென்ச்சர் பண்ட் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.863 கோடி நிதி திரட்டியுள்ளது.

இதுகுறித்து ஃபிரெஷ்டுஹோம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஃபிரெஷ்டுஹோம் நிறுவனம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 160-க்கும் மேற்பட்ட நகரங்களில் ரசாயன கலப்பு இல்லாத மீன், இறைச்சி உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஃபிரெஷ்டுஹோம் மூலம் 4 ஆயிரம் மீனவர்கள், விவசாயிகள் தங்கள் பொருட்களை மின்னணு முறையில் ஏலம் விடுகின்றனர்.

அவ்வாறு பெறப்படும் மீன், இறைச்சி ஆகியவை குளிர்பதனம் செய்யப்பட்டு, 100 சதவீத தரப் பரிசோதனைகளுடன் 36 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களைச் சென்றடைகின்றன.

இந்த உணவுப் பொருட்கள் தேசிய மற்றும் சர்வதேச உணவுப்பொருள் தரநிலைகளை கடைபிடிக்கும் புகழ்பெற்ற ஏஜென்சிகளால் சான்று பெற்றவை. தற்போது ஃபிரெஷ்டுஹோம் நிறுவனம் அமேசான் சம்பவ் வென்ச்சர் பண்ட் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.863 கோடி நிதியைத் திரட்டியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி திரட்டல் குறித்து ஃபிரெஷ்டுஹோம் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஷான் கடவில் கூறும்
போது, “அமேசான் சம்பவ் வென்ச்சர் ஃபண்ட் எங்கள் நிதியுதவி சுற்றுக்கு தலைமை தாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் விவசாயிகள், மீனவர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளருக்கு அதிக மதிப்பை வழங்க முயற்சிப்பதால், லாபம், நிலையான மதிப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE