புதுச்சேரி பல்கலை. துணைவேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள்: நடவடிக்கை கோரும் மார்க்சிஸ்ட்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மீது டெல்லி பல்கலைக்கழகமும் புகார் தெரிவித்துள்ள சூழலில், அவர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரியுள்ளது.

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராஜாங்கம் கூறியதாவது: ''புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 6000த்-க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய குர்மீத் சிங் தற்போது துணைவேந்தராக இருந்து வருகிறார். இவர் மீது தற்போது டெல்லி பல்கலைக்கழகம் பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளது. (டெல்லி பல்கலைக்கழக வீட்டை காலி செய்யாமல் ரூ.23 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார்). இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக இவர் மீது சொல்லப்பட்ட பல்வேறு புகார்கள் உண்மையாகி உள்ளன.

இவரின் தலைமையிலான பல்கலைக்கழக நிர்வாகம் கல்விக் கட்டணத்தை 50 முதல் 200 சதவீதம் வரை உயர்த்தி ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், 20 ஆண்டுகளாக இயக்கப்பட்ட இலவச பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அமைப்பதற்காக காலாப்பட்டில் 760 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு இலவசமாக வழங்கியது. அப்போது, 21 படிப்புகளில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை பல்கலைக்கழகம் வழங்கியது.

பல்கலைக்கழகத்தில் தற்போது நடத்தப்படும் படிப்புகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 21 படிப்புகளை தவிர்த்து, மற்ற 53 படிப்புகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் பார்த்து வருகிறார். ஏற்கெனவே, இவர் மீது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய பணியாளர் நியமனம், கட்டுமானப்பணி, டெண்டர் முறைகேடு, ஸ்மார்ட் போர்டு வாங்கியதில் ஊழல், என மிகப் பெரும் ஊழல் முறைகேடுகள் தொடர்கிறது. பதவி காலம் முடிந்த பின்புமும் தொடர்ந்து பதவியில் நீடிக்க துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

மேலும், புதுச்சேரி மாணவர்களின் நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில், தற்போது மத்திய டெல்லி பல்கலைக்கழகமும் முக்கியமான புகார் அளித்து இருக்கும் நிலையில் குர்மீத் சிங்கை உடனடியாக அவர் தார்மிக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் எனவும், கடந்த 2017 முதல் இதுவரை நடைபெற்ற கட்டுமான பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் கோருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்