வாகன எண்களை படம் பிடித்து அபராதம் விதிக்க சென்னையில் மேலும் 200 அதிநவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 200 அதிநவீன தானியங்கி ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம் விதிமீறல் வாகன ஓட்டிகளின் மீதான பிடி மேலும் இறுகுகிறது.

விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் வாகன நெரிசல்களை குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம் நேரடியாக அபராதம் விதிக்கின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப்படுகிறது.

புகைப்படம் மூலம் அபராதம்: அதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டு பாணியில் டிராஸ் (TROZ) என்ற கேமரா சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் வைக்கப்பட்டு அது எடுத்து அனுப்பும் புகைப்படம் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் டிராஸ் கேமரா பொருத்த ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து போலீஸாரின் தொடர் நடவடிக்கையால், 2021-ஐஒப்பிடுகையில் 2022-ல் விபத்துகள் 11.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் விபத்து உயிரிழப்புகளும் 11.52 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதற்கு விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது எடுக்கும் கடுமையான நடவடிக்கையே காரணம் எனவும் போக்குவரத்து போலீஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், விதிமீறல்களில் ஈடுபட்டதாக 2020-ல்18 லட்சத்து 69 ஆயிரத்து 316 வழக்குகளும், 2021-ல் 21 லட்சத்து 2,209 வழக்குகளும், 2022-ல் 22 லட்சத்து 94 ஆயிரத்து 823 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க நிலுவை அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸார் கண்டிப்புடன் வசூலித்து வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள்மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துபயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல்கார் ஓட்டுபவர்கள், நிறுத்த குறியீட்டைதாண்டி சாலையில் வாகனத்துடன் நிற்பவர்கள், எதிர் திசையில் வாகனத்தில்செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்கள், வாகன பந்தயம் உட்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சென்னை முழுவதும் ஆங்காங்கே ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) என்றழைக்கப்படும் 200 அதிநவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கேமராக்கள் 15 உள்ளநிலையில், தற்போது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்களை ஏஎன்பிஆர் என்றழைக்கப்படும் அதிநவீன கேமராக்கள் துல்லியமாக படம்பிடித்து அதை போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பி வைத்துவிடும்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு விதிமீறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கே போலீஸார் அனுப்பி வைத்து அபராதசெலானையும் இணைத்து அனுப்பிவிடுவார்கள். இதன்மூலம் விதிமீறல் வாகன ஓட்டிகள் மீதான பிடியை மேலும்இறுக்கி உள்ளதாகவும், இதனால் விபத்துகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் வெகுவாக குறையும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.

அரசு வாகனங்கள் மீது நடவடிக்கை: அரசு பேருந்துகள் மற்றும் அரசுவாகனங்களும் அதிகளவில் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விதிமீறல்களில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்