ஆர்பி.உதயகுமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா - பிப்., 23-ல் பழனிசாமி நடத்தி வைக்கிறார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அருகே டி.குன்னத்தூரில் ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி சமத்துவ சமுதாய திருமணம் நடத்தி வைக்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் மற்றும் 51வது ஆண்டு அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெ., பேரவையின் சார்பில், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி மணமக்கள் உட்பட 51 ஏழை, எளிய மணமக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் நடத்தி வைக்கிறார்.

தேர்வு செய்யப்பட்ட 51 ஜோடி மணமக்களுக்கு திருமண நாளில் அணியும் மணமகளுக்கான முகூர்த்த பட்டு புடவை, மணமகனுக்கு முகூர்த்த பட்டு வேஷ்டிகள் வழங்கப்படுகிறது. டி.குன்னத்தூரில் ஜெயலலிதா திருக்கோயில் மணிமண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமண மேடைக்கான பந்தல், சமையல் செய்யும் கூடங்கள், உணவு அருந்தும் இடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் ஆர்பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "ஜெயலலிதா தனது பிறந்த நாள் விழாவில், எத்தனை நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அவருக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்றால் ஒவ்வொரு ஆண்டும், அவரின் திருப்பெயரால் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஆகும். ஏற்கெனவே ஜெ., பேரவை சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 60 திருமணங்கள், அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடைபெற்றது.

தற்போது ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இந்த திருமண விழாவை நடத்திட இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிசாமி ஜெ., பேரவைக்கு வாய்ப்பினை வழங்கி உள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திருமணத்தில் மூகூர்த்த புடவை, வேட்டி, தாலிக்கு தங்கம், சீர் வரிசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எனது மகளுக்கு வழங்குவதைப் போல் ஒரே மாதிரியாக 51 ஜோடி மணமக்களுக்கும் வழங்கப்படுகிறது. 51 ஜோடி மணமக்களும் ஒரே மேடையில் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 51 ஜோடி மணமக்களுக்கு கே.பழனிசாமி தனது திருக்காரத்தால் திருமாங்கல்யத்தை எடுத்து நடத்தி வைக்கிறார். இந்த திருமணத்தில் பங்கேற்கும் மணமக்கள் பெற்றோர்கள், அவர்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வு வண்ணம் தகுந்த ஏற்பாடுகளும். மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 23-ம் தேதி காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலுக்கு வரும் கே.பழனிசாமிக்கு பாரம்பரியமிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதன்பிறகு தனது திருக்காரத்தால் எனது மகள் பிரியதர்ஷினி முரளி மணமக்கள் உள்ளிட்ட 51 ஏழை எளிய மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து தந்து சமத்துவ சமுதாயத்தை நடத்தி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்