ஜேஎன்யு பல்கலை.யை நடத்துவதே ஏபிவிபி பரிவாரம்தானா? - கே.பாலகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

சென்னை: "பல்கலைக்கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ‌பிவிபி அதனை முடக்க முயல்கிறது. ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏபிவிபி பரிவாரம்தானா என்ற கேள்விதான் எழுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏபிவிபி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் கூட மீண்டும் தாக்க முயன்றுள்ளார்கள் ஏபிவிபி அமைப்பினர்.பல்கலைக்கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ‌பிவிபி அதனை முடக்க முயல்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏபிவிபி பரிவாரம்தானா என்ற கேள்விதான் எழுகிறது. இதற்கு முன்பும் கூட ஏபிவிபி அமைப்பினர், வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து மாணவர் தலைவர்‌கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது‌ அந்த வன்முறையை தமிழ்நாட்டு மாணவரை நோக்கி நடத்தியுள்ளனர்.பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேஎன்யூ பல்கலை கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்தச் சம்பவம் குறித்து ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவர் மையம் ஒன்றில் (Teflas) மாணவர் சிலரும் வெளியாட்களும் சேர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளனர். அப்போது நேர்ந்த குழப்பத்தில், நம் வணக்கத்திற்குரிய தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது; திரித்துச் சொல்லப்பட்டதாகும். இந்த நிகழ்வை தீவிரமாக விசாரிக்குமாறு துணைவேந்தர் பணித்துள்ளார்.

தேசியத் தலைவர்களின் அரும்பணிகளை என்றென்றும் மதித்துப் போற்றிப் பல்கலைக்கழக வளாகத்தில் பன்முகத்தன்மையை நிலைநாட்டுதலும் பல்கலைக்கழக வளாகத்தில் நல்லுறவைப் பேணுதலும் இணைகோடுகளாக அமையவேண்டும் என்பதே துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தினரின் உள்ளார்ந்த விருப்பம். இதற்கு மாறாக யார் நடந்துகொண்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்