சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 43-வது வார்டில் குடிநீர் சுத்திகரிப்பு திறக்க வந்த எம்.பி மாணிக்கம் தாகூரை பெண்கள் முற்றுகையிட்டு சுகாதார வளாகம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என பெண்கள் புகார் தெரிவித்தனர்.
சிவகாசி மாநகராட்சி அம்மன்கோவில்பட்டி மேல்நிலைப் பள்ளியில் மத்திய கல்வி நிதியில் அமைக்கப்படும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் பணியை விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், மேயர் சங்கீதா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் மாநகராட்சி 43 வது வார்டு அம்மன்கோவில்பட்டி தெருவில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போர்வெல் உடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சிவகாசி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போது தான் ரூ.1000 கோடி நிதி கிடைத்து மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும். இதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்து கொண்டார். ஈரோடு இடைத்தேர்தலில் கொள்கை அடிப்படையில் காங்கிரசுக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
» செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும்போது புதுச்சேரி அரசும் கூடுதலாக தொகை செலுத்த முடிவு
» கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: கருத்துக் கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு; 12 பேர் எதிர்ப்பு
சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்திற்கு தலைமை அதிகாரி நியமிக்கப்படாதது கண்டிக்கதக்கது. ரயில்வே திட்டங்கள், பட்டாசு தொழில் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு சிவகாசியை புறக்கணித்து வருகிறது. திமுக அரசு 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. புதுமை பெண் உள்ளிட்ட சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் தோல்வி கண் முன்னே நிற்கிறது. இடைத்தேர்தல் வெற்றி என்பது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும்” என்றார்.
அப்போது, அங்கிருந்து கிளம்பிய எம்.பி மாணிக்கம் தாகூரை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு, சுகாதார வளாகம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு, “தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்கப்பட உள்ளது'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago