சென்னையை மட்டும் வஞ்சித்த கோடை மழை: கடந்த மார்ச் 1 முதல் மழைப் பொழிவு இல்லை

By ச.கார்த்திகேயன்

தமிழகம், புதுவையில் இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் ஒரு நாள் கூட கோடை மழை பெய்யவில்லை.

தமிழக மாவட்டங்களில் வெள்ளம், புயல், வறட்சி என பல்வேறு பேரிடர்களை அடுத்தடுத்து சந்திக்கும் மாவட்டமாக சென்னை உள்ளது. இந்த ஆண்டு கோடையில் இயல்புக்கு மாறாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது.

ஆனால், சென்னையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் இன்றுவரை கோடை மழையே பெய்யவில்லை. இதனால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை சென்னையில் சராசரியாக 38.4 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நாள் கூட பெய்யாமல் சென்னையை கோடை மழை வஞ்சித்துள்ளது. இதனால் மேற்கூறிய காலகட்டத்தில் சென்னையில் மழைப்பொழிவு ‘0’ ஆகவும், சராசரியை விட 100 சதவீதம் குறைவாகவும் உள்ளது.

இதேபோன்று காஞ்சிபுரத்தில் 90 சதவீதம் குறைவாகவும், புதுச்சேரியில் 83 சதவீதம் குறைவாகவும், திருவள்ளூரில் 76 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

கோடை காலத்தில் காரைக்காலில் 58 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இயல்பைவிட 254 சதவீதம் அதிகமாக 205.3 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்டங்களில் கோடையில் அதிக மழை பெற்ற மாவட்டமாக காரைக்கால் விளங்குகிறது.

அதேபோல கிருஷ்ணகிரியில் இயல்பை விட 50 சதவீதம் அதிக மாகவும், ஈரோட்டில் 42 சதவீதம் அதிகமாகவும், பெரம்பலூரில் 40 சதவீதம் அதிகமாகவும், தருமபுரி யில் 22 சதவீதம் அதிகமாகவும் மழை பெய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

இந்த கோடையில் சென்னை யில் மட்டும் மழை பெய்யாதது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “மார்ச் 1 முதல் மே 17-ம் தேதி வரை கடல் காற்று நிலத்தை நோக்கி வரும் நேரத்தை விட, தரைக்காற்று கடலை நோக்கி வீசிய நேரங்களே அதிகமாக இருந்துள்ளது. அதனால், சென் னையில் மேகக் கூட்டங்கள் உரு வாகவில்லை. மழைப் பொழிவும் ஏற்படவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்