சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு வாரத்தில் 32,000 தெருக்களில் கொசு ஒழிப்பு பணி

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடந்த சில வாரங்களாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கொசு வலை, கொசு விரட்டிகள் போன்ற பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொசு உற்பத்தி அதிகரிப்பு,மாநகராட்சியின் அலட்சியப்போக்கு தொடர்பாக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கடந்த12-ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 7 நாட்களில் மழைநீர் வடிகால்களில் மட்டும் 3,104 கி.மீ. நீளத்துக்கு கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், 3,133 கி.மீ. நீளத்துக்கு கொசு ஒழிப்புப் புகை பரப்புதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 32,040 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகை பரப்பியும், நீர்நிலைகளில் 536 கி.மீ. நீளத்துக்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம்கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 600 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளில் 4ரோபோடிக் இயந்திரங்கள், நீரிலும்நிலத்திலும் இயங்கும் வகையிலான 3 சிறிய மற்றும் 2 பெரிய ஆம்பிபியன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரை செடிகள் முறையாக அகற்றப்பட்டு, கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், வீராங்கல்ஓடை, மாம்பலம் கால்வாய் மற்றும்விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் தனிக் கவனம் செலுத்தி கொசுஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

4 ரோபோடிக் இயந்திரங்கள், நீரிலும் நிலத்திலும் இயங்கும் 5 ஆம்பிபியன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE