எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவி களுக்கு சிறப்பு வகுப்புகள், தேர்வு கள் நடத்தி பயிற்சி அளித்ததால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ராமநாத புரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு, ஜாதிக் கலவரம் போன்ற காரணங்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கல்வி நிறுவனங்கள் உருவாகவில்லை. ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றவும் விரும்புவதில்லை.
அதனால் பெரும்பாலான கிராமப்புற அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும். பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவித்தனர். இதனால் சரியான மதிப்பெண்கள் பெற முடியாமலும், தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டதாலும் பல ஆண்டுகளாக கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் ராமநாதபுரத்துக்கு இருந்தது.
ஆனால் சில ஆண்டுகளாக இவற்றை தகர்த்து கல்வியில் ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறி வருகிறது. கடந்த வாரம் வெளி யான பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கல்வியில் வளர்ச்சி அடைந்த திருநெல்வேலி, சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை ராம நாதபுரம் பின்னுக்கு தள்ளி உள்ளது. இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாவட்டத்தில் 248 பள்ளிகளில் இருந்து 17,979 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 17,648 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 98.16 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 97.10 சதவீதம் தேர்ச்சியுடன் மாநில அளவில் நான்காம் இடமும், 2015-ம் ஆண்டு 96.37 சதவீதம் பெற்று மாநில அளவில் 8-ம் இடமும் பிடித்தது. மேலும் 248 பள்ளிகளில் 83 அரசு பள்ளிகள் உட்பட 157 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாநிலத்தில் 3-ம் இடம் பெறக் காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் கூறியதாவது:
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 முதல் 5.30 மணி வரை ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மறுநாள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை தேர்வு நடத்தப்பட்டது. அன்றைய தினமே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெற்றோரின் கையொப்பம் பெறப்பட்டது. ஒவ் வொரு வெள்ளிக்கிழமையும் தலைமை ஆசிரியரால் இப்பணி மீளாய்வு செய்யப்பட்டது. ஒவ் வொரு பாடத்துக்கும் மாதத்துக்கு நான்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.
முதல் பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முதல் திருப்புதல் தேர்வு ஆகியவை முடிந்த பின்னர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோரால் மீளாய்வுக் கூட்டம், பாட ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப் பட்டன. ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து முன்னேற்றம் அடைந்தனர். பாட ஆசிரியர்களால் ஒரு மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கப் பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
மாநில பெற்றோர்-ஆசிரியர் கழ கம் மூலம் வழங்கப்பட்ட வினா வங்கி அனைத்து மாணவர் களுக்கும் வழங்கப்பட்டு, அதன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தொடர்ந்து மாணவர்கள் மீது கவனம் செலுத்தியதன் பயனாகத் தான் மாநிலத்தில் மூன்றாமிடம் பிடிக்க முடிந்தது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago