ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிரவசம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய்-சேய் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைச் சேர்ந்தவர் சுமதி (25) பிரசவத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, தனது கணவர் சின்ன அடைக்கான் (28) தாய் காளியம்மாள் (50) ஆகியோருடன் சுமதி ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருத்துவமனையிலிருந்து வேதாளைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோவை வித்தானூரைச் சேர்ந்த மலைராஜ் (52) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆட்டோ ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ராமேசுவரத்திலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த இன்னோவா கார் மற்றொரு வாகனத்தை ஓவர் டேக் செய்ய முயன்றது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் சுமதி, ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பிறந்து மூன்றே நாட்களே ஆண் குழந்தை, சின்ன அடைக்கான், காளியம்மாள் ஆகியோர் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூன்று நாள் கை குழந்தை, சின்ன அடைக்கான் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்த இன்னோ கார் டிரைவரான விக்னேஷ் (34) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய்-சேய் உள்பட 4 பேர் உயிரழந்த சம்பவம் வேதாளை கிராம மக்களிடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago