சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிங்கார வேலரின் 164-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவதற்காக அரசியல் தலைவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மனுவுடன் வந்த முதியவர் ஒருவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர்காவல் துறையினர் அவரை மீட்டு, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து அந்த முதியவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது பெயர் குணசேகரன். 50 ஆண்டுகளாக ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் எனது வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, என்னைமிரட்டி வருகிறார்.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் நான் தீக்குளிக்க முயன்றேன்” என்றார். பின்னர், அவரது குடும்பத்தினரை வரவழைத்த போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago