2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் ‘வைகை’, ‘தாமிரபரணி’, ‘பொதிகை’! 

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டம், ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இது வடக்கு, மத்திய, தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் விதமாக இந்த வழித்தடம் அமையவுள்ளது. இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்


மலைகளின் பெயர்
தொடங்கும் இடம் - முடியும் இடம் - பெயர்

மாதவரம் பால்பண்ணை - மாதவரம் நெடுஞ்சாலை - நீலகிரி
மாதவரம் பால்பண்ணை - மாதவரம் நெடுஞ்சாலை - பொதிகை
மாதவரம் பால்பண்ணை - வேணுகோபால் நகர் - ஆனைமலை
மாதவரம் பால்பண்ணை - வேணுகோபால் நகர் - சேர்வராயன்
அயனாவரம் - பெரம்பூர் - கல்வராயன்
அயனாவரம் - பெரம்பூர் - மேலகிரி
அயனாவரம் - ஓட்டேரி - கொல்லி


ஆறுகளின் பெயர்கள்
தொடங்கும் இடம் - முடியும் இடம் - பெயர்

கிரீன்வேஸ் தெற்கு - அடையாறு சந்திப்பு - காவேரி
கிரீன்வேஸ் தெற்கு - அடையாறு சந்திப்பு - அடையாறு
கிரீன்வேஸ் வடக்கு - மந்தவெளி - நொய்யல்
கிரீன்வேஸ் வடக்கு - மந்தவெளி - வைகை
சேத்துப்பட்டு தெற்கு - ஸ்டெர்லிங் சாலை - சிறுவாணி
சேத்துப்பட்டு தெற்கு - ஸ்டெர்லிங் சாலை - பாலாறு
சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - பவானி
சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - தாமிரபரணி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்