சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, விதிமீறல்கள் உள்ள காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் படங்கள் வெளியாகின்றன.
சில நாட்கள் கழித்து அதே திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. ஆனால், திரையரங்கில் வெளிவந்தபோது, நீக்கப்பட்ட காட்சிகள், வசனங்களை எல்லாம் அதில் இணைத்து வெளியிடுகின்றனர்.
சமீபத்தில், ஒரு பிரபல நடிகர் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் ஓடிடி திரையில் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில், அந்த பிரபல நடிகரே தரக்குறைவான வார்த்தைகளை உச்சரிப்பது கண்டிக்கத்தக்கது. இது சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் செயலாகும். இணைய வழி திரைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது திரைத்துறையினரின் கடமை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago