வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மேலும் மேம்படுத்த வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டுக்கான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் விருப்பத்துக்கேற்ற வேலை வாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தொடங்கப்பட்ட www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குறுகிய கால இலவச திறன் பயிற்சி திட்டங்கள், சங்கல்ப் திட்டம், ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக நடைபெறவிருக்கும் இலவச திறன் பயிற்சிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலர்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 3,50,000 மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை கண்காணிக்கவும், கலை, அறிவியல் கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மேலும் மேம்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், குறுகிய கால பயிற்சி நிறுவனங்களை ஆய்வுசெய்து தரமான பயிற்சிகள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறும், சிறப்புத் திட்டங்கள், பிற துறைகள் சார்ந்த திறன் பயிற்சிகளை முன்னணி நிறுவனங்களோடு இணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அமைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்