‘தமிழைத் தேடி’ ராமதாஸ் பயணம்: பிப்.21-ல் சென்னையில் தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழைத் தேடி பயணத்தை சென்னையில் வரும் 21-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்குகிறார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘எங்கும் தமிழ் -எதிலும் தமிழ்’ என்பது தான் ஒருகாலத்தில் முழக்கமாக இருந்தது.ஆனால், இன்று எங்கே தமிழ் என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.

பயிற்று மொழியாக்க சட்டம்: அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தமிழ கத்தின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும். பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்.

8 நாட்கள் பயணம்: இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை 8 நாட்கள் ‘தமிழைத் தேடி’ பிரச்சார பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். 21ம் தேதி காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் பிரச்சார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்