பள்ளிக் குழந்தைகளோடு தரையில் அமர்ந்து கலை நிகழ்ச்சியை ரசித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: பள்ளிக் குழந்தைகளோடு சேர்ந்து தரையில் அமர்ந்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்து மாணவர்களை ஊக்குவித்தார்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் மாங்குளம் கிராமத்தில் இன்று இந்து உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில் 74-வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியா மகேந்திரன் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி க.கூரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அ.லதாராணி வரவேற்றார்.

இவ்விழாவில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், பள்ளி குழந்தைகளின் நடனத்தை எம்பி சு.வெங்கடேசன், குழந்தைகளோடு சேர்ந்து தரையில் அமர்ந்து கரவொலி எழுப்பி கண்டு ரசித்தார். பின்னர் குழந்தைகளிடம் கைகுலுக்கி உற்சாகப்படுத்தினார்.

இவ்விழாவில், வட்டார கல்வி அலுவலர் ஆர். எஸ்தர் ராணி, மாவட்ட கவுன்சிலர் வடிவேல் முருகன், மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பாண்டிஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஆ.செல்வி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்