கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டைக்கு சென்றவர் மாயம்: தமிழக வனத்துறை விசாரணை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டை சென்றவர் திரும்பாததால், வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14ம் தேதி இரண்டு பரிசல்களில் கோவிந்தபாடி, தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் பாலாற்று வழியாக சென்றுள்ளனர்.

பரிசல்களில் சென்றவர்களில் சிலர் மட்டும் ஊர் திரும்பிய நிலையில், கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா (37) என்பவர் மீண்டும் ஊர் திரும்பவில்லை. கர்நாடக வனத்துறையினர், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக, தப்பி வந்தவர்கள் ஊர் மக்களிடம் கூறியுள்ளனர். கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா சிக்கினரா அல்லது அவரை வனத்துறையினர் பிடித்து சென்றனரா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாலாற்றில் இரண்டு பரிசல்களில் இருந்த இரண்டு மான் உடல்கள், டார்ச் லைட்டையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்து சென்றதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதால், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனால், தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு செக் போஸ்ட் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர் ராஜாவை தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்