ஆன்லைன் சேவைகள் முழுமையாக சீர் செய்யப்பட்டதாக தமிழக மின் வாரியம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மின் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக சீர் செய்யப்பட்டுவிட்டதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை இணையதளம் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. இதன்படி www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்நிலையில், நேற்று (பிப்.16) ஆன்லைன் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்து இருந்தது. தற்போது, இது முழுமையாக சீர் செய்யப்பட்டுவிட்டதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளாது. இது குறித்து டான்ஜெட்கோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பான நுகர்வோர் கவனத்திற்கு, டான்ஜெட்கோ ஆன்லைன் சேவைகள் மாற்று அமைப்புகளின் ஆதரவுடன் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டு பின்பு இரவு 11.54 மணியளவில் முழுமையாக மீட்கப்பட்டது. பொருத்தமைக்கு நன்றி” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்