மருத்துவர்களுக்கான தகுதித் தேர்வில் லிம்ராவில் பயிற்சி பெற்றவர்கள் 86% தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: வெளிநாடுகளில் படித்து இந்தியா திரும்பும் மருத்துவர்களுக்கான தகுதித் தேர்வில் சென்னை லிம்ரா மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “இம்மையத்தின் இப்பணியால் தமிழகத்துக்குக் கூடுதலான எண்ணிக்கையில் மருத்துவர்கள் கிடைக்கின்றனர். தமிழக மக்களின் நலன் காப்பதில் இது கூடுதல் பயன் தரும்” என்றும் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து லிம்ரா இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் எஜுகேஷன் மைய நிர்வாக இயக்குநர் முகமது கனி கூறியதாவது: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து டாக்டர்களாகத் திரும்புபவர்களுக்கு இந்திய தேசிய தேர்வு முகமை எப்.எம்.ஜி.இ. தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கு மருத்துவராகச் செயல்பட அனுமதியளித்து வருகிறது. அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் இத்தேர்வில் சரியான பயிற்சி இல்லாததால் 20 சதவீத மருத்துவர்களே வெற்றி பெறுவார்கள்.

முன்பு இந்த தேர்வுக்குப் பயிற்சி பெற மருத்துவர்கள் டெல்லி செல்ல வேண்டியிருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க 10 ஆண்டுகளுக்கு முன்பு லிம்ரா, சென்னையில் ஒரு புதிய பயிற்சி மையத்தைத் தொடங்கியது. இங்கு அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வி கற்றுத்தருவதில் அதிக அனுபவம் மிக்க பேராசிரியர்கள் மூலம் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் தேர்வு தேர்ச்சி விகிதம் 12 முதல் 20 சதவீதமாக இருந்தபோது, இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தற்போது இது மேலும் உயர்ந்து 86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இச்சாதனையைப் பாராட்டிய அமைச்சருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

வெளிநாடுகளில் பணியாற்ற விரும்பும் நம் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உதவும் பிரிவையும் லிம்ரா தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல்களைப் பெற விரும்புவோர் சென்னை மயிலாப்பூரில் செயல்படும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்