சென்னை: சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம் இறுதிகட்ட ஆலோசனையில் உள்ளது.
சென்னையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டத்தில் சென்னை முழுவதும் பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. குறிப்பாக இதற்கு தனியாக செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இந்தச் செயலியில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த முறையின் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட் மூலம் நீங்கள் தேர்வு செய்த பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்யலாம்.
இந்நிலையில், இதற்கான இறுதிகட்ட பணிகளை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், "மத்திய அரசின் Centre for Development of Advanced Computing என்ற நிறுவனம் ஒரு சில நகரங்களில் common mobility card திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
» கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ‘டார்மெட்ரி’ வகை தங்கும் அறைகள்: திறப்பு குறித்த அப்டேட் தகவல்
» மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க பிப்.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு
சென்னையிலும் இதை நடைமுறைப்படுத்த இந்த நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து துறைகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago