ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது பண்ருட்டி அதிமுக நிர்வாகி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது மயங்கி விழுந்த பண்ருட்டி அதிமுக பிரமுகர் உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில், திமுக, அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணாகிராமம் பகுதியைச் சேர்ந்த கந்தன் (51) என்பவரும் தேர்தல் பணிக்காக ஈரோட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தார்.

இவர் அண்ணா கிராமம் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தார். ஈரோட்டில் தங்கியிருந்த அவர், தினமும் பிரச்சாரத்துக்கு சென்று வந்தார். பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில் நேற்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, நெஞ்சு வலிப் பதாகக் கூறி மயங்கி விழுந்தார். அதிமுகவினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்