பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீத மாநில தரவரிசைப் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் முதலிடம் பெற்றுள்ளதன் மூலம் 29 முறை இந்த சாதனையை விருதுநகர் நிகழ்த்தியுள்ளது
பிளஸ் 2 பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 200 பள்ளிகளைச் சேர்ந்த 11,397 மாணவர்கள், 13,706 மாணவிகள் என மொத்தம் 25,103 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 24,564 பேர் தேர்ச்சி பெற்றுள்ளர். விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த 1986-ல் விருதுநகர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீத பட்டியலில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வந்தது. கடந்த 2001-02-ல் 94.30 சதவீத தேர்ச்சியும், 2002-03-ல் 90.25 சதவீதம், 2003-04-ல் 91.74 சதவீதம், 2004-05-ல் 88.96 சதவீதம், 2005-06-ல் 87.87 சதவீதம், 2006-07-ல் 94.37 சதவீதம், 2007-08-ல் 95.87 சதவீதம், 2008-09-ல் 96.14 சதவீதம், 2009-10-ல் 96 சதவீதம் 2010-11-ல் 95.03 சதவீதம், 2011-12-ல் 94.68 சதவீதம், 2012-13-ல் 95.87 சதவீத தேர்ச்சியும் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்தது.
கடந்த 2013-14-ல் 96.12 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பின்னர், 2014-15-ல் 97.46 சதவீதம் தேர்ச்சி பெற்று மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விருதுநகர் மாவட்டம், கடந்த 2015-16-ம் கல்வியாண்டில் 95.73 சதவீதம் தேர்ச்சி பெற்று மீண்டும் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டில் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மீண்டும் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.மனோகரன் கூறும்போது, “மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு காரணமாகவே தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடிந்தது. மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.
மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago