கோவை | கார் கவிழ்ந்து முதுகு தண்டுவடம் பாதித்த இளைஞருக்கு ரூ.71.24 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

கோவை: கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு, காரை ஓட்டிச் சென்றவர், உரிமை யாளர், காப்பீட்டு நிறுவனம் இணைந்து ரூ.71.24 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த வி.சந்தோஷ் (27), தனது நண்பர்களுடன் கடந்த 2015 ஆகஸ்ட் 10-ம் தேதி உதகைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். பர்லியார் பத்தடி பாலத்துக்கு அருகில் செல்லும்போது சந்தோஷின் நண்பரான ரவிச்சந்திரன் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கியுள்ளார்.

பின்னர், சிங்கா நல்லூரைச் சேர்ந்த கார்த்திக் (28), காரை சாலையின் இடது ஓரமாக நிறுத்த முயன்ற போது, பள்ளத்துக்குள் கார் தலைகீழாக விழுந்தது. இதில், சந்தோஷ் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தால் தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கோரி அவர் சார்பில் தந்தை வெங்கடாசலபதி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கார்த்திக்கின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஜெயராணி என்பவரது பெயரில் உள்ளது. தனியார் காப்பீடு நிறுவனத்தில் வாகனத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக சந்தோஷின் தலை, முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ குழுமம் அவருக்கு 90 சதவீத நரம்பியல் நிரந்தர ஊனம் ஏற்பட்டதாக சான்றளித்துள்ளது. விபத்தால் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக சந்தோஷ் உள்ளார்.

விபத்து நடந்தபோது சந்தோஷின் வயது 18. தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால் படிப்பை முடித்து, அதற்கு தகுந்த நல்ல வேலையில் அவர் சேர்ந்திருப்பார். மேலும், அவரது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை வாழ் நாள் முழுவதும் பராமரிக்க ஒரு நபரின் உதவி தேவைப்படுகிறது.

எனவே, சந்தோஷூக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.71.24 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வாகனத்தை ஓட்டிய கார்த்திக், வாகன உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்