சென்னை: “தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் காட்டுகின்றன” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம்களில் நடந்த கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்காவல் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை, கோவையில் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை போன்ற செய்திகள் தமிழ்நாடு காவல் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்குகின்றன.
கொள்ளை சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல் துறையினரே தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு என்ன செய்யப்போகிறது?'' என்று அந்தப் பதிவில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago