உள் மாவட்டங்களில் இன்று குளிர் அதிகரிக்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 13-ம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

12-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவின்படி (குளிர்) மலைப் பகுதிகளான கொடைக்கானலில் 7.5 டிகிரி, ஊட்டியில் 8.8 டிகிரி, குன்னூரில் 10.4 டிகிரி, ஏற்காடில் 12 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE