ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்காக திமுக எந்தப் பணியும் செய்யவில்லை, என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில், ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகளிடம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 21 மாத திமுக ஆட்சியில்ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப் படவில்லை. அதிமுக ஆட்சியில் ரூ.484 கோடி மதிப்பில், கொண்டு வரப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடிவடைந்தும், இதுவரை ஈரோடு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதுதான் திராவிட மாடல்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்காக திமுக எந்தப் பணியும்செய்யாததால், பணத்தை வைத்து வாக்கு கேட்டு வருகின்றனர். ஒவ்வொரு பூத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர் களை அடைத்து வைத்து வருகின்றனர். இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்ந்துள்ளது.
இது போல மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுப்பதில்லை. நான் ஆட்சியில் இருக்கும் போது, எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்த கம்யூனிஸ்டுகள், இப்போது அதே திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் வேலு அறிவித்த போது மவுனம் சாதிக்கின்றனர்.கடந்த 2 ஆண்டுகளாக எந்த பிரச்சினைக்கும் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago