ஈரோடு | அடக்கம் செய்ய பணம் இல்லாததால் ஒரு வாரமாக வீட்டுக்குள் இருந்த 2 உடல்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி வண்டிப்பேட்டை குமணன் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி கனகாம்பாள் (80). இவருடைய மகள் சாந்தி (60). சாந்தியின் கணவர் மோகன சுந்தரம் (65), மகன் சரவணக்குமார் (34) ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை குமணன் வீதி பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கோபி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கனகாம்பாள், மோகன சுந்தரம் ஆகியோர் இறந்து கிடந்தனர்.

அவர்களது உடல் அழுகி துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது. தொடர்ந்து இரு உடல்களையும் மீட்ட போலீஸார், கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில், மோகன சுந்தரம் இறந்து ஏழு நாட்களானதாகவும், கனகாம்பாள் இரு நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும் சாந்தி தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், அப்படியே வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களுடன் ஒரு வாரமாக இருந்த சாந்தி, அவரது மகன் சரவணக் குமார் ஆகியோர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக் கின்றனர். பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்