செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் தாயாரிடம் ரூ.10 லட்சம் நிவாரணம், வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கல்

By செய்திப்பிரிவு

தாம்பரம்: செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் தாயாருக்கு முதல்வர் உத்தரவுப்படி ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் குடியிருப்புக்கான ஆணையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் நேற்று வழங்கினார்.

மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் கோகுல் ஸ்ரீ (17). தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ரிலே பாக்ஸ் ஒன்றை திருடிய வழக்கில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

இதனிடையே அங்கிருந்த காவலர்கள் தாக்கியதில் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி சிறுவன் கோகுல் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து சிறுவனின் தாயார் பிரியாவை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அவருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ரூ.50 லட்சம் இழப்பீடும் குடியிருக்க வீடும் அரசு வேலையும் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2.5 லட்சமும், சமூக பாதுகாப்பு துறை இழப்பீடு நிதியில் இருந்து ரூ.7.5 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடியிருக்க வீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சிறுவனின் தாயார் பிரியா வரவழைக்கப்பட்டு, அவரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருக்க வீடு ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடை நம்பி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், வட்டாட்சியர் கவிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொண்ட சிறுவனின் தாயார் பிரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, "நிவாரண உதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி. என் மகன் உயிரிழந்த வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்