சென்னை: "அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்" என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 6 பேரை ஆளுநர்களாக நியமித்தும் 7 ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவு பிறப்பித்தார். இதில் கோவையைச் சேர்ந்த தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஏற்கெனவே ஆளுநர்களாக இருந்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago