வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களுடன் அரசாணை - முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மன உளைச்சல்: கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வீடியோ எடுத்த விவகாரம், அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் 9 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கை போலீஸார் முழுமையாக விசாரிக்கவில்லை. வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட அப்போதைய முதல்வர் பழனிசாமி, அப்போதைய தலைமைச் செயலர் ஆகியோரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடந்த ஆண்டு ஜனவரியில் அளிக்கப்பட்ட எனது மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 2019-ல் பொள்ளாச்சி யில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்