2,200 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல்

By செய்திப்பிரிவு

சென்னை: கோடை காலத்தில் தினசரி மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மின் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, கோடை காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என மின் வாரியம் கணித்துள்ளது. எனவே, வரும் 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் 4 நிறுவனங்களிடம் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதைத் தவிர, மேலும் 10 நிறுவனங்களிடம் இருந்து மார்ச் 1 முதல் மே 20-ம் தேதி வரை 1,600 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது. இதில், 1,000 மெகாவாட் தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும், 600 மெகாவாட் பிற மாநிலங்களில் இருந்தும் ஒரு யூனிட் ரூ.5-க்கு வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE