புதுச்சேரி: திமுகவின் ஆட்சிக்கான எதிர்ப்புணர்வை, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் என்று பாஜக முன்னாள் தேசியச் செயலர் எச்.ராஜா கூறினார்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு பாஜக புதுவை மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எச்.ராஜா பேசுகையில், “மத்திய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கை கடைக்கோடி மக்களைச் சென்றடையும் திட்டங்களைக் கொண்டதாக உள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறையை பாஜக அரசு படிப்படியாகக் குறைத்துள்ளது. அதன்படி 6.7 சதவீதத்தில் இருந்து பற்றாக்குறை, தற்போது 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் 4.5 சதவீதமாக குறைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, “தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதியளித்த அரசுபிற மாவட்டங்களில் அனுமதிக்காதது சரியல்ல. உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து அனுமதிக்க வேண்டும். திமுகவின் ஆட்சிக்கான எதிர்ப்புணர்வை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் இடைத் தேர்தலில் வழங்குவார்கள்.
தொண்டர்களை அமைச்சர்கள் அடிப்பது தான் விடியல் ஆட்சியா? கடலில் பேனா சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும். அதானி பிரச்சினையால் எல்ஐசி, வங்கிகளுக்கு பாதிப்பில்லை என்பது எதிர்க்கட்சிகளுக்கே தெரியும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago