நெல்லை: அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நெல்லை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக உள்ளது. அதிமுக பல கட்சிகளை தாங்கி பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி தொடரும்.
திமுக கூட்டணியால் திமுக மட்டுமே வளர்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் தேய்ந்து கொண்டு உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டனர். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் காணமால் போய் விடும்." இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago