கடலில் வேண்டாம்; தரையில் வைக்கலாம்: பேனா நினைவுச் சின்னம் குறித்து இபிஎஸ் கருத்து

By செய்திப்பிரிவு

நெல்லை: பேனா நினைவுச் சின்னத்தை தரையில் வைக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சி 21 மாத காலத்தை நிறைவு செய்துள்ளது. இந்த 21 மாத காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வேலை கூட செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைய பணிகள் இந்த தொகுதியில் செய்யப்பட்டது.

மழையால் டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை பெற்று தந்த அரசு அதிமுக அரசு. எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தற்போது ரூ.20 ஆயிரம் தான் கொடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது

21 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தந்தைக்கு நினைவிடமும், நூலகமும் கட்டியது மட்டுமே முதல்வர் செய்த பணி. தற்போது பேனா சின்னம் வைக்க முயற்சி செய்து கொண்டு உள்ளனர். கடலில் பேனா வைக்கிறார்கள். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். தரையில் வைக்கலாம். இதற்கு மிகுந்த எதிர்ப்பு உள்ளது. நினைவிடத்திற்கு உள்ளே தரையில் பேனா வைக்கலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE