சென்னை | அங்கீகாரமின்றி செயல்படும் 162 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அங்கீகாரமின்றி செயல்படும் 162 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதிபள்ளிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய சுயநிதி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் தடையில்லா சான்றிதழ் உட்பட சில அனுமதிகளை பெற வேண்டியது கட்டாயமாகும்.

எனினும், சில தனியார் கல்விநிறுவனங்கள் ஒரு பள்ளிக்கு மட்டும்அனுமதி வாங்கி கொண்டு, அதன்மூலம்கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக தனியார் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் 162 சுயநிதி பள்ளிகள்முறையான அங்கீகாரம் பெறாமல்செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் பள்ளிகளின் விவரம்சேகரிக்கப்பட்டுள்ளன.

அந்த பள்ளி நிர்வாகங்களுக்கு விரைவில் நோட்டீஸ்அனுப்பி விளக்கம் பெறப்பட உள்ளது.அதன்பிறகு அப் பள்ளிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது அதற்குஅங்கீகாரம் இருக்கிறதா என்பதைஉறுதி செய்துகொள்ள வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE