திமுக மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜா நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பால்வளத் துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா, ஆவடி மாநகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் மகன் எஸ்.என்.ஆசிம்ராஜா. இவர், ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராகவும், பணிக்குழு தலைவராகவும் உள்ளார். திமுக ஆவடி மாநகர செயலாளராகவும் இருந்தார்.

இந்நிலையில், ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து ஆசிம்ராஜாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் சன்.பிரகாஷ் என்பவரை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி பணிக்குழு தலைவராக இருப்பதால், மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் ஆசிம்ராஜாவின் தலையீடு அதிகம் உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இவர் மீது அதிருப்தி இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டு, அதன்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் புதுமைப் பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த சூழலில், மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் நாசரின் மகன், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்