சென்னை | அறிவுரையை மீறி ஆபத்தான பயணம்: மாணவர்கள் மீது புகார் அளிக்க நடத்துநர்களுக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தாலோ அல்லது உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்தப் பேருந்தை நிறுத்தி, படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மாணவர்களை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும்.

அறிவுரையை மீறி மாணவர்கள் செயல்பட்டால், போக்குவரத்துக்கு இடையூறின்றி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது அவசர அழைப்புஎண்ணான 100-க்கோ அல்லது மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கோ தகவல் தெரிவித்து, புகார் அளிக்க வேண்டும்.

பேருந்துகளில் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என்பதை உணர்ந்துப் பணிபுரிய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE