சென்னையில் இருந்து இயக்கப்படும் காரைக்குடி, மதுரை விரைவு ரயில்கள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில் தண்டவாளம், தொழில்நுட்பப் பணி காரணமாக, சென்னையில் இருந்து காரைக்குடி, மதுரை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - காரைக்குடிக்கு பிப்.16, 17, 20, 21, 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (12605), காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு பிப்.17, 18, 21, 22, 24, 25, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (12606) ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை எழும்பூர் - மதுரைக்கு பிப்.17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (22623),சென்னை சென்ட்ரல் - மதுரைக்கு பிப்.22, 24, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்(20601), தாம்பரம் - நாகர்கோவிலுக்கு பிப்.27-ம்தேதி இயக்கப்படும் ரயில் (22657), மறுமார்க்கமாக, நாகர்கோவில் -தாம்பரத்துக்கு பிப்.28-ம் தேதி இயக்கப்படும் ரயில் (22658) ஆகியவையும் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல், சென்னை எழும்பூர் - மதுரைக்கு பிப்.15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில் (12637) கூடல் நகர் - மதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு பிப்.24, 25 தேதிகளில் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில் காரைக்குடி - செங்கோட்டை இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளது. தேஜஸ் விரைவு ரயில் உட்பட சில ரயில்களும் பகுதி ரத்தாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்