கொடைக்கானல் | பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம். இங்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநிக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இக்கோயில் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டுக்கான தேரோட்ட திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில், தினமும் சேவல், அன்னம், மயில், காளை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. பிப்ரவரி 15ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் திருத்தேர் ஏற்றமும், மாலை 5 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்