தருமபுரி: ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பெறாமல் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்தவர் தருமபுரியில் இருந்து நேற்று விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கினார்.
மதுரையைச் சேர்ந்தவர் அகில இந்திய காந்திய இயக்க தேசிய செயலாளர் கருப்பையா (53). மது ஒழிப்பு உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம், சைக்கிள் பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில் பணம் பெறாமல் வாக்களிக்க வலியுறுத்தி நேற்று தருமபுரியில் இருந்து ஈரோட்டுக்கு இவர் நடைபயணம் தொடங்கினார். இதற்காக, வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தில் தன்னை பிரச்சாரகராக இணைத்துக் கொண்ட கருப்பையா, தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டப பகுதியில் இருந்து இந்த பயணத்தை தொடங்கினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: மதுவிலக்கு வேண்டி 99 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். ஆனால், அதற்கு சாத்தியமான சூழல் இருப்ப தாக சிறிதும் நம்பிக்கை ஏற்படவில்லை. தகுதியும், திறமையும் உள்ள வேட்பாளர்களுக்கு பணம் பெறாமல் வாக்களித்து, அதன் மூலம் அதிகாரத்துக்கு வருபவர்களால் தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்ற நிலை இருப்பதை உணர முடிகிறது.
வாக்காளர்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதியில் மேற்கொள்ள உள்ளேன். இதற்காக அந்த தொகுதி முழுக்க பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன், என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago