ஓசூர்: அஞ்செட்டி அருகே 39 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய வீடுகளைச் சீரமைத்துத் தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி, கேரட்டி,பெட்டமுகிலாளம், ஜவளகிரி, தளி உள்ளிட்ட கிராமங்கள் மலைகளாலும், வனப் பகுதிகளாலும் சூழப்பட்டுள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் கிடைக்கும் தேன் மற்றும் விறகுகளைச் சேகரித்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதிக்கு ஏக்கம்: இப்பகுதி மக்களுக்கு மருத்துவம், மின்விளக்கு, சாலை,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றளவும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மேலும், அரசின் சலுகைகளை முழுமையாகப் பெற முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். அஞ்செட்டி அருகே மல்ல அள்ளி மலைக் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கடந்த 1984-ம் ஆண்டு அரசு சார்பில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 27 கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டன.
இவ்வீடுகளை முறையாகப் பராமரிக்காததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வீடுகள் படிப்படியாக சேதமடைந்து இடிந்து விழுந்தன. மீதமுள்ள வீடுகளில் தற்போது, மேற்கூரையின் உள்பக்கம் கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்தபடி உள்ளன. மேலும், மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதைத் தடுக்க வீடுகளில் குடியிருப்போர் மரக்கம்புகளைத் தடுப்பாக அமைத்து ஆபத்தான நிலையில் குடியிருந்து வருகின்றனர். இடிந்து விழுந்த வீடுகளில் வசித்த குடும்பத்தினர் அப்பகுதியில் குடிசைகள் அமைத்து பல ஆண்டுகளாக மழைக்கும், வெயிலுக்கும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
வருவாய் இல்லை; இது தொடர்பாக மலைவாழ் மக்கள் கூறியதாவது: போதிய வருவாய் இல்லாததால், வீடுகளை முறையாக பராமரிக்க முடியவில்லை. குடியிருப்பு வீடுகளைச் சீரமைத்துத் தரக்கோரி பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனில்லை. இடியும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்தோ அல்லது முழுவதும் இடித்து விட்டோ புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.
அதேபோல இடிந்து விழுந்த 15 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளைக் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago