புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை நேற்று திருச்சிக்கு வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏடிஎஸ்பி தலைமையிலான 11 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.
அதில் முன்னேற்றம் ஏற்படாததால் இந்த வழக்கை கடந்த ஜன.14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று 92 பேரிடம் விசாரணை செய்தனர். இதில் சந்தேகிக்கும் வகையிலான சிலரை மட்டும் திருச்சியில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
அதன்படி, திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று 8 பேர் ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மாதிரிகள் ஆய்வு; இது குறித்து சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறியது: வேங்கை வயல் சம்பவத்தில், விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிவியல் தொழில் நுட்பத்துடன் தொடர்பு படுத்தி ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். கைப்பற்றப்பட்ட மாதிரிகளை ஆய்வகத்துக்கு உட்படுத்தி உள்ளோம்.
அவற்றை தொடர்புடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஏற்கெனவே, விசாரணைக்கு உட்படுத்தியவர்களில் சந்தேகிக்கும் வகையிலானோரை திருச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதன்படி இன்று (நேற்று) 8 பேர் ஆஜராகினர். விசாரணையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் முடிவு கிடைக்கும் என்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி தலைமையிலான போலீஸார் எடுத்துக்கொண்ட காலத்தை விட கூடுதலான நாட்களை சிபிசிஐடி போலீஸார் எடுத்துக் கொண்ட நிலையிலும் கூட, குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக அண்மையில் வேங்கைவயல் வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago