மதுரையில் சித்திரைத்திருவிழா கோலாகலம்: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கோயில் நகரமான மதுரையில் ஆண்டுமுழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், லட்சக்கணக்கான மக்கள் திரளும் சித்திரைத்திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றவை.

இந்த திருவிழா மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர் கோயில் சித்திரைத்திருவிழா மே 6-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாக்களின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10-ஆம் தேதி நடக்கிறது. சித்திரைத்திருவிழா தொடங்கியதால் மதுரை நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

அழகர் கோயிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை சமுதாய ரீதியாகவும், கிராமங்கள் வாரியாகவும் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க 430 மண்டகபடிகள் உள்ளன. கள்ளழகர் வரும் பாதையில் வழிநெடுக இந்த மண்டகபடிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கின்றன.

இந்நிலையில் நேற்று வைகை ஆற்றில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளைகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத்துறை சேவூர் இராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் நலன் கருதி கிழக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதி, வடக்காடி வீதி மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தற்காலிக தகர நிழல் பந்தல் 1,15,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாண மேடை மற்றும் திருக்கல்யாண மண்டபத்தில் குளிர்சாதன வசதியும், திருக்கல்யாண மேடை மற்றும் பழைய திருக்கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பான முறையில் மலர் அலங்காரம் செய்யப்படவுள்ளது. திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் சுமார் 6000 பக்தர்கள் முன்னுரிமை அடிப்படையில் கட்டணமில்லா தரிசனமாக தெற்கு கோபுர வாசல் வழியாகவும், ரூ.500 கட்டணச்சீட்டு வைத்திருப்பவர்கள் (2250 எண்ணம்) மேற்குக் கோபுரத்தின் வழியாகவும், ரூ.200 கட்டணச்சீட்டு வைத்திருப்பவர்கள் (3250 எண்ணம்) வடக்கு கோபுரத்தின் வழியாவும் அனுமதிக்கப்படவுள்ளார்கள். அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகள் திருக்கல்யாணத்தை காண தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாண வைபவத்தினை நேரடி ஒளிபரப்பில் காண ஏதுவாக அகன்ற ஒளித்திரைகள் மூலம் 20 இடங்களில் அமைத்திட ஏற்பாடு செய்யப்படவுள்ளது. வருகை தரும் பக்தர்களின் காலணிகளை இலவசமாக வைத்திட 6 இடங்களில் தற்காலிக இலவச காலணி பாதுகாப்பகம் மற்றும் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபம் மிக நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளதை, இந்த ஆண்டு திருக்கோயில் நிதியில் ரூ.41 இலட்சத்தில் சீரமைத்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் மதுரை மாநகராட்சி மூலம் சிமெண்ட் தொட்டி மற்றும் சரிவுபாலம் அமைக்கப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பி சுவாமி இறங்கும் சமயம் தண்ணீரில் இறங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சுமார் 15 இடங்களில் எல்.இ.டி திரை ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சித்திரைத்திருவிழாவில் 2,500 போலீஸார் பாதுகாப்பு:

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருகல்யாணம் வைபவம் மே 7-ல் நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ஆணையர்கள் அருண் சக்திகுமார், பாபு, உதவி ஆணையர் திருமலைக்குமார் ஆகியோருடன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

திருக்கல்யாண நாளில் கிழக்கு நுழைவு வாயிலில் அரசுத்துறையினரும், தெற்குவாயிலில் 6 ஆயிரம் பொதுமக்களும், வடக்கு நுழைவு வாயிலில் ரூ.200 டிக்கெட் எடுத்தவர்களும், ரூ.500 டிக்கெட் வாங்கியோர் மேற்கு வாயிலும் அனுமதிக்கப்படுவர். மஞ்சள் கார் பாஸ் வைத்திருப்போர் கிழக்கு வாயிலும், புளு நிற பாஸ் உள்ளோர் தெற்கு வாயிலும், பிங் கலர் கார் பாஸ் பெற்றவர் கள் வடக்கு வாயிலும் கோவிலுக்குள் செல்லலாம்.

கூட்ட நெரிசலில் வழிப்பறி திருட்டு தடுக்க, சாதாரண உடையில் போலீஸார் ஈடுபடுவர். போலீஸ் வாகனத்தில் சுழலும் மொபைல் கேமிரா மூலமும் கண்காணிக்கப்படும். சித்திரை வீதியில் பிரசாதம் வாங்குமிடங்களிலும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண ஆற்றுக்குள் எல்லீடு திரைகள் அமைக்கப் படும். தல்லாகுளம், பெருமாள் கோவில், கோரிப்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படும்.

விஐபிகளின் வாகனங்கள் விக்டர் பாலத்தில் நிறுத்த அனுமதி இல்லை. பக்தர்களுக்கு உதவ அனைத்துத்துறை ஊழியர், அலுவலர்கள் அடங்கிய சேவைக்குழு ஒன்று கூடுதல் எஸ்பி தலைமையில் செயல்படும். எவ்வகையிலும், திருவிழா கலாச் சாரம் பாதிக்காமல் பாதுகாப்பு இருக்கும். துணை ஆணையர் கள் தலைமையில் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்