திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த மாணிக்க மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி வாசுகி. இவர்களது மகள் செவ்வந்தி (18). இவர், தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலை யில் இவர்கள் மூவரும், வீட்டில் நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்தனர். அப்போது, வீட்டு மேற்கூரையின் உட்புற சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில், மாணவி செவ்வந்திக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் கிராமத் தில் வசிப்பவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகளை தமிழக அரசு கட்டிக் கொடுத்தது.
தொகுப்பு வீடுகள் சேத மடைந்த நிலையில் உள்ளதால், சீரமைத்து கொடுக்குமாறு மனு கொடுத்தும் பலனில்லை. தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. செந்தில்குமாரின் வீட்டில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் பகலில் நடைபெற்றதால் காயத்தோடு போனது.
இதே சம்பவம் இரவு உறங்கும்போது நடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்துள்ள வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித் தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago