கோத்தகிரி, கயத்தாறு அருகே பரிதாபம்: இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி

By செய்திப்பிரிவு

கோத்தகிரி, கயத்தாறு அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சாமுவேல் நகரைச் சேர்ந்த 31 பேர், நீலகிரி மாவட்டம் உத கைக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். பல்வேறு இடங் களை பார்த்துவிட்டு, நேற்று முன் தினம் இரவு வேலூருக்கு புறப்பட் டுள்ளனர். கோத்தகிரி தாலுகா கீழ் தட்டப்பள்ளம் என்ற இடம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து, உருண்டு அங்கிருந்த மரம் மற்றும் பாறை மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் சங்கர்(50), மல்லிகா(69), பாஸ்கர்(45) ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இடிபாடுகளில் சிக்கிய பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்த 21 பேரை மீட்டு மேட்டுப்பாளையம், கோத்தகிரி, கோவை ஆகிய இடங் களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சேர்த்தனர்.

படுகாயமடைந்த பன்னீர்செல் வம்(43), சரோஜா(50), விஜயலட் சுமி(40) ஆகியோர் மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட் டனர். ஆனால், செல்லும் வழி யிலேயே பன்னீர்செல்வம், சரோஜா இறந்தனர்.

லேசான காயமடைந்த மனோஜ் குமார்(12), சாம்ஜெபராஜ்(16), கிரிஜா(11), உஷா(48), கமலா(38), மல்லிகா(45), கோபி(36), வீரமணி, கற்பக செல்வி(37) ஆகியோர் கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். படு காயமடைந்த 5 பேர், கவலைக் கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோத்தகிரி போலீ ஸார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பலியான வர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன.

அதிக பாரமே காரணம்

15 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய வாகனத்தில் 31 பேர் பயணித் துள்ளதாகவும், அதிக பாரம், வேகம் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படு கிறது.

சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

சென்னை மடிப்பாக்கம், கங்கா காவேரி தெருவைச் சேர்ந்தவர் அஜய்(44). இவர், தனது மகன் நித்தின்(12), நண்பர் களான அதே பகுதியைச் சேர்ந்த பாபு பிரசாத்(36), சத்தியநாராய ணன்(35) ஆகியோருடன் திருநெல் வேலியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு காரில் வந்தார்.

காரை சத்தியநாராயணன் ஓட்டினார். இந்தக் கார் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் நேற்று அதிகாலை வந்தபோது, திடீரென கட்டுப் பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. காரில் பயணித்த அஜய், நித்தின், பாபு பிரசாத் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பலத்த காயமடைந்த சத்திய நாராயணன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பலியானார். கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்