திருப்பூர்: மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம், திருப்பூர் நொய்யல் வீதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசு 44 வகையான சட்டங்களை நீக்கி, பெரு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை மனிதநேய தொழிலாளர் சங்கம் எதிர்க்கிறது.
தமிழ்நாட்டில் வீட்டு பணியாளர்களுக்கு சமூக பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம், வார விடுமுறை ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
பாஜகவிடம் அடமானத் தில் சிக்கியுள்ள அதிமுக, குழப்பமான நிலையில் உள்ளது" என்றார். இதைத்தொடர்ந்து, மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகளை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago