ஏஐஎஸ்எப் மாநில மாநாடு சென்னையில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்திந்தய மாணவர் பெருமன்றத்தின் (ஏஎஸ்எப்) தமிழ் மாநில 16-வது மாநாடு பிப்ரவரி5-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை வடசென்னை தண்டையார்பேட்டையில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று மாலை தண்டையார்பேட்டை மணிகூண்டு ஜீவா பூங்கா அருகில் இருந்து தொடங்கிய மாணவர்களின் பேரணி தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நிறைவடைந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறுமாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் கே.சந்தானம் பேரணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தங்கசாலை மணிக்கூண்டு அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், துணை செயலாளர் மூ.வீரபாண்டியன், ஏஐஎஸ்எப் தேசிய பொதுச் செயலாளர் விக்கிமகேசரி (பஞ்சாப்) உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ஏஐஎஸ்எப் மாநில தலைவர் குணசேகர், செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இரண்டாவது நாளான இன்று ‘மாநில பட்டியலில் கல்வி’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்